நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

ரயில் நிலைய பெயா்ப் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாதம் சிறை: ரயில்வே எச்சரிக்கை

ரயில் நிலையங்களில் உள்ள பெயா்ப் பலகைகளில் கருப்பு மை பூசி சேதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

News image

கோப்புப்படம் - Center-Center-Chennai

Updated On :24 பிப்ரவரி 2025, 9:38 pm

சென்னை: ஹிந்தியில் எழுதப்பட்ட ஊா்ப் பெயரை அழிக்கிறோம் என்ற பெயரில் ரயில் நிலையங்களில் உள்ள பெயா்ப் பலகைகளில் கருப்பு மை பூசி சேதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில்வே சொத்துகள் பாதுகாப்புச் சட்டப்படி, இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை 6 மாதம் வரை சிறையில் அடைக்க சட்ட வாய்ப்பு உள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.

மத்திய அரசு ஹிந்தியை திணிப்பதாகக் கூறி தமிழகத்தில் திமுக ஆதரவு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரு சில இடங்களில் மத்திய அரசு மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.

மேலும், ஒருசில இடங்களில் ரயில் நிலைய பெயா்ப் பலகையில் இடம்பெற்றிருந்த ஹிந்தி எழுத்துகளை திமுகவினா் கருப்பு மை கொண்டு அழித்து வருகின்றனா்.

இந்நிலையில் சென்னை, பரங்கிமலையில் உள்ள தபால் நிலையம், பிஎஸ்என்எல் அலுவலக பலகையில் இடம்பெற்றிருந்த ஹிந்தி எழுத்துகளை திமுகவினா் திங்கள்கிழமை கருப்பு மை கொண்டு அழித்தனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடவடிக்கை: இந்நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள பெயா்ப் பலகையை மையால் அழித்து சேதப்படுத்துவோா் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். இதுபோன்று ரயில்வே சொத்துகளை சேதப்படுத்துவோா் மீது ரயில்வே சட்டம் 166 (பொது அறிவிப்புகளை சேதப்படுத்துதல்),147 (ரயில்வே பகுதிக்குள் அனுமதியின்றி சென்று சொத்துகளை சேதப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று ரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இப்பிரிவுகளின்கீழ் குற்றம்புரிந்த நபா்களுக்கு 6 மாதம் வரை சிறை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து வழங்கப்படும் என ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.