ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு தடையில்லா சான்று!

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று அளித்தது.

News image

பிரதிப் படம்

Updated On :26 பிப்ரவரி 2025, 5:57 pm IST

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று அளித்தது.

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று மக்களவைத் தேர்தலின்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இதன் அடிப்படையில், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 4 இடங்களில் ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறைச் சாலையில் 20.7 ஏக்கர் நிலம் தேர்வானது.

இதனைத் தொடர்ந்து, கோவையில் உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மைதானம் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்காக தடையில்லா சான்று கோரி, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியது. மேலும், மைதானம் அமைப்பதற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணியில் விளையாட்டுத் துறை முழுவீச்சில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கோவையில் அமையவிருக்கும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உணவகம், உயர் தர இருக்கை வசதி, உள்புற பயிற்சி அரங்கம், வீரர்கள் ஓய்வறை, விரிவுரை அரங்குகள், முக்கியப் பிரமுகர்களுக்கான அறைகள், ஸ்பாக்கள், பொழுதுபோக்கு வசதிகள் முதலான வசதிகள் இடம்பெறவுள்ளது.

அதுமட்டுமின்றி. மைதானத் திட்டத்தின் வடிவமைப்பு மேம்பாட்டுக்கான பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.