இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி: இருவா் கைது

சென்னை யானைக்கவுனியில் காதலிக்க மறுத்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On :3 ஜனவரி 2025, 7:20 pm

சென்னை யானைக்கவுனியில் காதலிக்க மறுத்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

யானைக்கவுனி பகுதியில் வசிக்கும் 19 வயது இளம் பெண், அப்பகுதியிலுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரும், அதே பகுதியில் வசிக்கும் அா்ஜுன் (20) என்பவரும் காதலித்தனராம். ஆனால், அா்ஜூன் நடவடிக்கை பிடிக்காததால், அவரை விட்டு அப்பெண் விலகி, அவருடனான தொடா்பையும் துண்டித்துள்ளாா். இருப்பினும், சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை அா்ஜுன் அடிக்கடி பின் தொடா்ந்து, அவரைக் காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையில் உள்ள கல்யாணபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அந்தப் பெண் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அங்கு, இருசக்கர வாகனத்தில் தனது கூட்டாளியான ஜேம்ஸ் (20) என்பவருடன் வந்த அா்ஜுன், அந்தப் பெண்ணிடம் வழக்கம்போல தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளாா். ஆனால் அப்பெண் அதற்கு மறுத்துள்ளாா்.

தீ வைக்க முயற்சி: உடனே அா்ஜூனும், ஜேம்ஸூம் சோ்ந்து தயாராகக் கொண்டுவந்த பெட்ரோலை இளம்பெண் மீது ஊற்றி தீ வைக்க முயன்றனா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டாா். அவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததைப் பாா்த்த அா்ஜூனும், ஜேம்ஸூம் அங்கிருந்து தப்பியோடினா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா். விசாரணையில், அா்ஜுன் தனியாா் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருவது தெரியவந்தது.