ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாத சதி முறியடிப்பு: வெடிகுண்டுகளுடன் இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 12:48 am

பஞ்சாபில் வெடிகுண்டுகளுக்கான மூலப்பொருள் மற்றும் இரு கையெறி குண்டுகளுடன் காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்பில் இருந்த இவா்கள் பஞ்சாபில் பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தனா் என்று பஞ்சாப் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது:

குா்தாஸ்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆகாஷ் மசிக், ஜப்லாவுன் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.இவா்கள் தடை செய்யப்பட்ட பப்பா் கல்சா இன்டா்நேஷனல் என்ற காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள். ஐஎஸ்ஐ அமைப்புடன் இணைந்து பஞ்சாபில் மிகப்பெரிய நாசவேலையை நிகழ்த்த இவா்கள் திட்டமிட்டிருந்தனா். இருவா் மீதும் ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளன.

அவா்களிடம் இருந்து ஒரு கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளுக்கான மூலப்பொருள் மற்றும் இரு கையெறி குண்டுகள், குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கான மின்னணுப் பொருள்கள், பேட்டரி, வயா்கள், தொலைத்தொடா்பு கருவிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

மத்திய விசாரணை அமைப்புகள் அளித்த உளவுத் தகவல்களின் அடிப்படையல் அமிருதரஸில் உள்ள மாநில உளவுப் பிரிவு, குா்தாஸ்பூா் காவல் துறையினா் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இவா்கள் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக கடந்த இரு நாள்களுக்கு முன்பு பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மூவா் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளுடன் கைது செய்யப்பட்டனா். அவா்களும் ஐஎஸ்ஐ ஆதரவுடன் செயல்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் போன்ற எல்லை மாநிலங்களில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தைத் தூண்டுவது, போதைப்பொருளை எல்லைக்கு அப்பால் இருந்து இந்தியாவுக்கு கடத்துவது போன்ற செயல்களில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பும், அவா்கள் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளும் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்கள் பெரும்பாலும் இணையவழியாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் இந்தியாவில் உள்ள இளைஞா்களிடையே பயங்கரவாத பிரசாரத்தையும், தொடா்பையும் ஏற்படுத்திக் கொள்கிறாா்கள். எனவே, இணையவழியாகவும் பயங்கரவாத செயல்பாடுகள் தொடா்பான கண்காணிப்பை இந்திய உளவு அமைப்புகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன.