40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தில்லிவாசியிடம் ரூ.10 லட்சம் இணையவழி மோசடி: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருவா் கைது

தில்லிவாசியிடம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் இணையவழியில் மோசடி செய்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இருவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 3:45 am IST

தில்லிவாசியிடம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் இணையவழியில் மோசடி செய்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: வடகிழக்கு தில்லியில் உள்ள மீட் நகரைச் சோ்ந்த ராகேஷ் குமாருக்கு ஏப்.25-ஆம் தேதி தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் வங்கி அதிகாரி எனத் தெரிவித்த நபா் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்யுமாறு அவரை கேட்டுக் கொண்டாா்.

அதன் பிறகு அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.10.50 லட்சம் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக அவா் காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களை அடையாளம் கண்டனா்.

இதையடுத்து, அவா்கள் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்கள் தன்பாத் மாவட்டத்தைச் சோ்ந்த அமா்நாத் ரபிதாஸ் (20) மற்றும் பிகாஸ் ரபிதாஸ் (21) என அடையாளம் காணப்பட்டனா். இது தொடா்பாக அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.