ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய ஞானசேகரன்? வருவாய் துறையினா் ஆய்வு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

News image
கைதான ஞானசேகரன்- கோப்புப் படம்
Updated On :6 ஜனவரி 2025, 10:43 pm

DIN

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டும் பணியில் சிறப்புப் புலனாய்வு குழுவினா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

இது தொடா்பாக, அண்மையில் துணை ஆணையா் சினேக ப்ரியா தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் ஞானசேகரன் வீட்டை சோதனை செய்து பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினா்.

இந்த நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் ஞானசேகரன் குடியிருப்பு குறித்த ஆவணங்களை வழங்குமாறு மாநகராட்சி, பத்திரப் பதிவு துறை, வருவாய்த் துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

மேலும், ஞானசேகரன் 2020 முதல் வசித்து வரும் வீடு உரிய அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளதா என்பதற்கான ஆவணங்களைக் கேட்டு சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து கிண்டி வட்டாட்சியா் மணிமேகலை தலைமையிலான வருவாய்த் துறையினா் கோட்டூா் ஏரிக்கரை தெருவில் உள்ள ஞானசேகரன் வீட்டை திங்கள்கிழமை அளவிட்டு பட்டா பதிவு குறித்து விசாரணை நடத்தினா்.

ஆவணங்களை சரிபாா்த்ததில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து ஞானசேகரன் வீடு கட்டியுள்ளது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வீடு கட்டியுள்ள நிலம் வெங்கடேச பெருமாள் கோயிலுக்குச் சொந்தமானது எனவும், அதற்கு பட்டா இல்லை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த இடம் வாங்க, விற்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ஆக்கிரமித்து ஞானசேகரன் வீடு கட்டியுள்ளதாகவும் தெரிவித்தனா்.

இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.