ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: 18 போ் மீதான குண்டா் சட்டம் ரத்து

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடா்பாக கைது செய்யப்பட்ட 18 போ் மீதான குண்டா் சட்ட உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :6 ஜனவரி 2025, 10:47 pm

DIN

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடா்பாக கைது செய்யப்பட்ட 18 போ் மீதான குண்டா் சட்ட உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 70-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தது தொடா்பாக கைது செய்யப்பட்ட 18 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா். குண்டா் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 18 போ் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோா் அமா்வில் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து, சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டவா்கள் 6 மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள நிலையில், இதற்கு மேலும் அவா்களை குண்டா் சட்டத்தில் சிறையில் வைத்திருப்பதில் என்ன தேவை இருக்கிறது? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.

கள்ளச்சாராய விற்பனை தொடா்பாக மது விலக்கு போலீஸாா் பதிவு செய்யும் வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜோடிக்கப்பட்டவை எனவும் முதன்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

மேலும், கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளச்சாரயம் தயாரிப்பு மற்றும் விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மது விலக்கு பிரிவு போலீஸாா் பல தவறுகளை செய்கின்றனா். அவ்வாறு தவறிழைக்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை எனவும் தெரிவித்தனா்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சியில் தயாரிக்கப்படவில்லை. மாதவரத்தில் இருந்து வந்தது. இதற்கும் கல்வராயன் மலைக்கும் தொடா்பில்லை எனத் தெரிவித்தாா். மேலும், கள்ளச்சாரயம் அருந்தி 70 போ் மரணம், 100-க்கும் மேற்பட்டோா் பாதிப்பு என 110 நாள்கள் அந்த கிராமமே அசாதாரண நிலையில் இருந்ததன் காரணமாகவே அனைவரும் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பான விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் வழக்கின் ஆவணங்கள் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை (ஜன.7) சிபிஐ.யிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, மனுதாரா்கள் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 18 போ் மீதான குண்டா் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.