
சென்னை: கடந்த 2002ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் மா. சுப்பிரமணியனை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வி.எஸ். பாபு, முன்னாள் உறுப்பினர்கள் தமிழ்வேந்தன் உள்பட 6 பேர் மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சாட்சியமளித்தவர்கள் பிறழ் சாட்சியமாக மாறியதாலும், குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்று கூறியும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக கவுன்சிலர்களைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், 70க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை, குறுக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறப்பு நீதிமன்றம் இன்று அமைச்சர் மா. சுப்பிரமணியனை விடுதலை செய்வதாக தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
வழக்குத் தொடரப்பட்டு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதை முன்னிட்டு, மா. சுப்பிரமணியன் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகியிருந்தார்.
நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியன், நீதிக்காக கடந்த 22 ஆண்டுகளாக நீதிமன்றத்தின் படிகட்டுகளில் ஏறி இறங்கினோம், இன்று நீதி கிடைத்துள்ளது என்று கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.