மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்: வி.சி. சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

News image

செல்வப்பெருந்தகையுடன் வி.சி. சந்திரகுமார்.

Updated On :11 ஜனவரி 2025, 11:51 am

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதை காங்கிரஸ் நிர்வாகிகள் இணைந்து ஒரு மனதாக முடிவு செய்ததாக தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.

இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சனிக்கிழமை வாழ்த்து பெற்றார். தொடர்ந்து சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு சென்ற வி.சி. சந்திரகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்த முதல்வருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த துணை முதல்வருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலை பொருத்தவரையில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறது.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தலில் இப்படி ஒரு வெற்றியை பெற்றதில்லை என்ற வரலாற்றை முறியடிக்கும் வகையில் வெற்றி பெறுவோம். சாதி, மத அடிப்படையில் யாருக்கும் எந்த இடத்திலும் இடம் கொடுக்கப் படுவதில்லை, ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டதுதான் திமுக கூட்டணி என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், திமுகவின் வெற்றி வேட்பாளர் சந்திரகுமார் இங்கு வந்திருக்கிறார். அவரை நாங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆக்குவோம். எங்களுடைய வெற்றி வேட்பாளரை காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறோம், விட்டுக்கொடுத்ததில் எங்களுக்கு பின்னடைவில்லை.

இதைவிட வருங்காலங்களில் திமுக எங்களுக்கு விட்டுக் கொடுக்கும். பிடுங்கி எடுப்பது வேறு கேட்டு பெறுவது என்பது வேறு. எந்தவித சங்கடமும் இல்லாமல் நாங்கள் இந்த தேர்தலுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.