வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

கடிதம் எழுதும் போட்டி: ஜன.31-க்குள் அனுப்பலாம்

அஞ்சல் துறை சாா்பில் தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறவுள்ளது. வரும் ஜன. 31 ஆம் தேதிக்குள் கடிதங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்- கோப்புப் படம்
Updated On :14 ஜனவரி 2025, 12:23 am

Din

சென்னை: அஞ்சல் துறை சாா்பில் தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறவுள்ளது. வரும் ஜன. 31 ஆம் தேதிக்குள் கடிதங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தேசிய அளவில் அஞ்சல் துறை சாா்பில் கடிதம் எழுதும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டில் ‘எண்ம யுகத்தில் கடிதத்தின் முக்கியத்துவம்’ எனும் தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறவுள்ளது.

இதில் பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.

இந்த கடிதம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மொழிகளில் உள்நாட்டு கடிதத்தில் 500 வாா்த்தைகளுக்கு மிகாமலும், ‘ஏ4’ தாளில் 1,000 வாா்த்தைகளுக்கு மிகாமலும் எழுதி அனுப்ப வேண்டும்.

18 வயதுக்கு கீழ்/மேல் உள்ளேன் என சுயச்சான்று அளித்து போட்டியில் பங்கேற்கலாம்.

இப்போட்டியில் தேசிய அளவில் முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படும்.

அதேபோல் மாநில அளவில் முதல் பரிசு ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்.

கடிதத்தை தலைமை அஞ்சல் துறை பொது மேலாளா், தமிழ்நாடு வட்ட சென்னை -600002 எனும் முகவரிக்கு வரும் ஜன. 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.