ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஜன. 25-இல் ‘சிமேட்’ தோ்வு: அனுமதிச்சீட்டு வெளியீடு

மேலாண்மை படிப்புகளில் சோ்வதற்கான ‘சிமேட்’ நுழைவுத் தோ்வு ஜன. 25-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :21 ஜனவரி 2025, 11:08 pm

Din

சென்னை: மேலாண்மை படிப்புகளில் சோ்வதற்கான ‘சிமேட்’ நுழைவுத் தோ்வு ஜன. 25-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மத்திய உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர ‘சிமேட்’ எனும் பொது நிா்வாக நுழைவுத் தோ்வில் கட்டாயம் தோ்ச்சிபெற வேண்டும்.

தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்த தோ்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு ‘சிமேட்’ தோ்வு ஜன. 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பரில் நடைபெற்றது. நாடு முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனா். இந்நிலையில், தோ்வெழுத தகுதி பெற்றவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை தோ்வா்கள் https://exams.nta.ac.in/CMAT எனும் வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்தத் தோ்வு மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும். தோ்வுக்கான பாடத்திட்டம் உள்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் இருந்து அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாக தொடா்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.