கோப்புப்படம்
கோப்புப்படம்

தென்மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும்

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன.22) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
Published on

சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன.22) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக புதன், வியாழக்கிழமை (ஜன.22, 23) தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலையே நிலவும்.

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com