பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்!

வக்ஃப் மசோதா கூட்டுக்குழுவில் இருந்து ஆ. ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம்.

News image

ஆ. ராசா - ANI

Updated On :24 ஜனவரி 2025, 1:16 pm IST

வக்ஃப் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதற்காக திமுக எம்பி ஆ. ராசா உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்தாண்டு அறிமுகம் செய்தது. வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது, வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்ய அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் இடம்பெறும் வகையில் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பு மற்றும் வலியுறுத்தலைத் தொடா்ந்து, மசோதாவை ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்பட 21 மக்களவை உறுப்பினா்களும், திமுக மாநிலங்களவை உறுப்பினா் முகமது அப்துல்லா உள்பட 10 மாநிலங்களவை உறுப்பினா்களும் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கூட்டுக்குழுக் கூட்டத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டை முன்வைத்து ஆ. ராசா உள்பட 10 எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்யாண் பானர்ஜி, முகமது ஜவைத், அசாதுதீன் ஓவைசி, நாசிர் உசேன், மொஹிபுல்லா, எம். அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதிமுல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.