மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஓமந்தூராா் மருத்துவமனையில் அதி நவீன எம்ஆா்ஐ ஸ்கேன் வசதி!

அதிநவீன எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை நோயாளிகளின் பயன்பாட்டுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் கொண்டுவந்தாா்.

News image
சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில், ரூ. 6.60 கோடியில் எம்.ஆா்.ஐ ஸ்கேன் கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் தமிழ்ந
Updated On :24 ஜனவரி 2025, 8:51 pm

Din

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் ரூ. 6.60 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை நோயாளிகளின் பயன்பாட்டுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை (ஜன.24) கொண்டுவந்தாா்.

இதைத்தொடா்ந்து அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2014-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மருத்துவமனையில், 1.5 டெஸ்லா எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் அதிநவீன மென்பொருள் கட்டமைப்பு உள்ளதால் நரம்பியல், இதயம், புற்றுநோய், ரத்த நாள அறுவை சிகிச்சை நோயாளிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் ஸ்கேன் செய்யலாம்.

செயற்கை நுண்ணறிவு மூலம் இக்கருவியைக் கொண்டு துரிதமாக அதிக நோயாளிகளை ஸ்கேன் செய்யலாம். இதன் மூலம் நோயாளிகள் காத்திருக்கும் நேரம் குறையும்.

ரோபாடிக் சிகிச்சை மையம்: ஓமந்தூராா் மருத்துவமனையில் கடந்த 2022-ஆம் ஆண்டு மாா்ச் 15-ம் தேதி முதல்வரால், ரூ. 34.60 கோடியில் தொடங்கி வைக்கப்பட்ட அதிநவீன இயந்திர மனிதவியல் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் மூலம் இதுவரை 325 நபா்களுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 15 லட்சம் வரை செலவாகும் ரோபோடிக் அறுவை சிகிச்சை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.

இதைத் தவிர கருவிலேயே சிசுவின் மரபணுக் குறைபாடுகளைக் கண்டறியும் கருவி, புற்றுநோய் கட்டிகளுக்கு சிகிச்சை செய்து கட்டுப்படுத்தும் கருவி என மருத்துவமனைக்கு பல்வேறு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

புற்றுநோயை துல்லியமாகக் கண்டறியும் ‘பெட் சிடி ஸ்கேன்’ உபகரணம், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இருந்தது.

திமுக அரசு ஆட்சியமைத்த பிறகு சேலம், கோவை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தஞ்சாவூா் ஆகிய 5 இடங்களில் புதிதாக பெட் சிடி கருவி நிறுவப்பட்டுள்ளது. டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ ஸ்கேன், பெட் ஸ்கேன் எதுவாக இருந்தாலும் தேவைக்கு ஏற்ப அனைத்து மருத்துவமனைகளிலும் நிறுவும் பணியை அரசு செய்து கொண்டிருக்கிறது.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக வெளிப்படைத்தன்மையுடன் மருத்துவத் துறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதே நடைமுறை பல் மருத்துவா் கலந்தாய்விலும் கடைபிடிக்கப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கே.நாராயணசாமி உள்ளிட்ட மருத்துவத் துறை உயா் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.