கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கட்சி தொடங்கியதும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்: யாரைச் சொல்கிறார் மு.க. ஸ்டாலின்?

கட்சி தொடங்கியதும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள் என்று சூசகமாகப் பேசியிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

News image
Updated On :24 ஜனவரி 2025, 6:44 am

DIN

சென்னை: கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மறைமுகமாகப் பேசியுள்ளார்.

ஒரே நேரத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 3,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை அறிவாலயத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. காலை முதலே ஆயிரக்கணக்கானோர் அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு திமுக துண்டைப் போர்த்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

பிறகு மாற்றுக் கட்சியினரை வரவேற்றுப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுகவில் சேர்ந்தவர்களுக்கு திமுகவில் சேர்வதற்கு ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்றால் சிலருக்குக் கோபம் வருகிறது.

திமுக ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல என்றும், கட்சி் தொடங்கியதுமே ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள். யாரையும் குறிப்பிட்டு அடையாளம் காட்ட விரும்பவில்லை. யாரையும் குறிப்பிட்டுச் சொல்லி இந்த மேடையின் கௌரவத்தை நான் குறைக்கவிரும்பவில்லை. நாட்டுக்காக உழைப்பது போல நாடகம் ஆடுபவர்கள் இருக்கிறார்கள். அவதூறாக பேசுபவர்களை மக்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்றும் முதல்வர் கூறினார்.

மேலும், பேசுகையில், நேற்று கட்சி் தொடங்கியவர்கள் கூட, தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதல்வராவோம் என பேசுகிறார்கள். ஏழைகளுக்குத் தொண்டாற்றத் தொடங்கியதுதான் திமுக, தமிழகத்துக்குத் தொண்டாற்றத் தொடங்கியது திமுக. இங்கே இணைபவர்கள், தாங்கள் முன்பிருந்த கட்சியின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை என்றும் பேசியுள்ளார்.

மக்களுக்கு இந்த ஆட்சியின் சாதனைகளை நினைவுபடுத்தினாலே போதும். ஆட்சியின் சாதனைகளால் 200 அல்ல 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறலாம் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.