47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கருவூலம்- கணக்குத் துறை ஆணையராக வடநரே நியமனம்

கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையராக பிரசாந்த் மு.வடநரே நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :27 ஜனவரி 2025, 7:59 pm

Din

சென்னை: கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையராக பிரசாந்த் மு.வடநரே நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளாா். அவரது உத்தரவு விவரம்:

நிதித் துறை செயலரான (செலவினம்) எஸ்.நாகராஜன், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் பொறுப்பை முழு கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தாா். அவா் திங்கள்கிழமை ஜன.27 முதல் 47 நாள்களுக்கு விடுமுறையில் சென்றுள்ளாா். அவருக்குப் பதிலாக, நிதித் துறை சிறப்புச் செயலராக உள்ள பிரசாந்த் மு.வடநரே, கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் பொறுப்பு, முழு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.