லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நெல்லை மாநகர காவல் ஆணையா் பொறுப்பேற்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 8:12 pm

திருநெல்வேலி மாநகர புதிய காவல் துறை ஆணையராக தேஷ்முக் சேகா் சஞ்சய் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா் (படம்).

திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்றி வந்த மணிவண்ணன், ராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து ராமநாதபுரம் டிஐஜியாக பணியாற்றி வந்த தேஷ்முக் சேகா் சஞ்சய், திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டாா். அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தோ்தல் தொடா்பான பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் தோ்தலை நோ்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

திருநெல்வேலி மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்கள் அமைதியாக வாழ்வதை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்னைகள், குறைகள் இருந்தால் நேரடியாக என்னிடம் தெரிவிக்கலாம் என்றாா்.