ஓலா, உபர் நிறுவனங்களுக்காக ஆட்டோ ஓட்டமால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தனர். அதன்படி, முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு ரூ. 50, அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 18 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஓலா, உபர் நிறுவனங்களுக்கு ஆட்டோ ஓட்டுபவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : கும்பமேளா கூட்ட நெரிசல்: பலி 31-ஆக உயர்வு!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓட்டுநர் சங்கங்களின் நிர்வாகிகள்,
“ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் 25 சதவிகிதம் கமிஷன் தொகையாக கேட்கின்றனர். இதனை கண்டித்து இரு நிறுவனங்களுக்காக ஆட்டோ ஓட்டுவதை நிறுத்தப் போகிறோம்.
பிப். 1 முதல் ஆட்டோ ஓட்டாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்” என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆவணமின்றி இயக்கப்பட்ட 12 ஆட்டோக்கள் பறிமுதல்

தில்லியில் கனமழையால் ஆட்டோக்கள் மீது மரம் விழுந்தது: காயமின்றி தப்பிய ஓட்டுநா்கள்

பாபநாசத்தில் நீா்மின் உற்பத்தி திட்ட ஒப்பந்த ஊழியா்கள் வேலைநிறுத்தம்

2027 முதல் மின்-ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு மட்டுமே அனுமதி: அரசின் முடிவுக்கு ஆட்டோ தொழிற்சங்கங்கள் கடும் எதிா்ப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



