சென்னையில் அமித் ஷா!

பாஜக மூத்தத் தலைவர் வெங்கையா நாயுடுவின் இல்ல விழாவில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வருகை
மத்திய அமைச்சர் அமித் ஷா
மத்திய அமைச்சர் அமித் ஷாகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பாஜக மூத்தத் தலைவர் வெங்கையா நாயுடுவின் இல்ல விழாவில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரும் பாஜக மூத்தத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் இல்லத் திருமண வரவேற்பு விழா, சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுவிக்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனி விமானம் தில்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார்.

அமித் ஷாவுக்கு விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்த பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சந்தித்து வாழ்த்தி, வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து கிண்டி, ஓ.எம்.ஆர். சாலை வழியாக திருமண விழாவுக்கு அமித் ஷா செல்கிறார்.

இந்த திருமண விழாவுக்கு துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா வருகை தருவதால், சென்னையில் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை வழக்கமான போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருமண வரவேற்பு விழாவுக்கு அமித் ஷா வருகை தந்தாலும், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் எதுவும் கலந்து கொள்ள மாட்டார் என்று முன்னரே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, அண்ணல் அம்பேத்கரை அவதூறாகப் பேசியதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து, தமிழக காங்கிரஸார் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வியாழக்கிழமை கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X