பதவியை இழந்த சங்கரன்கோவில் திமுக நகர்மன்றத் தலைவர்!

சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி பதவி இழந்தது பற்றி...
பதவியை இழந்த சங்கரன்கோவில் திமுக நகர்மன்றத் தலைவர்!
Published on
Updated on
2 min read

சங்கரன்கோவில் நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதால் நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி தனது பதவியை இழந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் அதிமுகவைச் சேர்ந்த 13 நகர மன்ற உறுப்பினர்களும் திமுக - 9 அதன் கூட்டணியான மதிமுக - 2, காங்கிரஸ் - 1, எஸ்டிபிஐ - 1 மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் 4 பேர் உள்ளனர்.

முன்னதாக நகராட்சித் தலைவர் போட்டியில் திமுக கூட்டணி சார்பில் 15 வாக்குகளும் அதிமுக சார்பில் 15 வாக்குகளும் சமமாக வாக்குகள் இருந்ததால் குலுக்கல் முறையில் திமுகவினரால் அறிவிக்கப்பட்ட உமா மகேஸ்வரி நகர்மன்றத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்களின் வார்டுகளில் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில்லை, ஒரு சார்பாக நடந்துகொள்கிறார் என அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.

தொடர்ந்து, அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் தங்கள் வார்டுகளுக்கு எதுவும் வசதி செய்துகொடுப்பதில்லை என அதிருப்தியான சில திமுக கவுன்சிலர்களும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர 24 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் இன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

உமா மகேஸ்வரி தவிர நகர்மன்ற வாக்கெடுப்பு கூட்டத்திற்கு 29 நகர்மன்ற உறுப்பினர்கள் வந்த நிலையில் 28 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர், ஒருவர் மட்டுமே உமா மகேஸ்வரிக்கு ஆதரவாக வாக்களித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியுள்ளதால் நகர்மன்ற தலைவர் பதவியை உமாமகேஸ்வரி இழந்துள்ளார்.

துணைத் தலைவராக உள்ள கண்ணன் தற்போது நகர்மன்றத் தலைவராக செயல்படுவார்.

விரைவில் நகர்மன்றத் தலைவரை கவுன்சிலர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

திமுக நகர்மன்றத் தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே வாக்களித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Sankarankovil Municipal Council Chairperson Uma Maheshwari lost her position after a no-confidence motion against her was passed in the Sankarankovil Municipal Council meeting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com