ஜூலை 7ல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை!

ஜூலை 7 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது பற்றி...
Local holiday for thoothukudi district
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
Published on
Updated on
1 min read

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி வருகிற ஜூலை 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி(திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மேலும் குடமுழுக்கிற்கான பணிகளும் ஏற்பாடுகளும் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருச்செந்தூர்கோயில் குடமுழுக்கையொட்டி தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் ஜூலை 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Summary

Local holiday for thoothukudi district due to Tiruchendur Arulmigu Subramania Swamy Temple Kumbhabhishekham

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com