
பெரம்பலூர் அருகே ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்களுடன் அமைச்சர் சிவசங்கர் தேரை வடம்பிடித்து இழுக்கும்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது.
வடம் பிடித்து இழுத்த தேரின் அச்சு முறிந்து மற்றொரு தேரின் மீது சாய்ந்ததால், நல்வாய்ப்பாகப் பக்தர்கள் காயமின்றி தப்பினர்.
அமைச்சர் சிவசங்கர் ஏற்பாட்டில், சரிந்த தேரிலிருந்து பொக்லின் உதவியோடு சுவாமி சிலைகளை மீட்டனர். பழைய தேரின் சக்கரங்கள் பழுது என தெரிந்தும் தேரை இழுத்துள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.