
அரசு நலத்திட்டங்களைப் பெறும் மக்கள் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தர்.
நாமக்கல்லில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் முடிவற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வரவேற்றுப் பேசினார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ.131.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றதும், முதலாவதாகப் போட்ட கையெழுத்து மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கு உரியதாகும். அந்தவகையில் இதுவரை 700 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 16 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் தினசரி 20 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைகின்றனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 1.15 கோடி பேர் பயன் பெற்று வருகின்றனர்.
தற்போது கூடுதல் விலக்குடன் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 1700 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா இங்கு வழங்கப்படுகிறது. ரூ.131 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அரசின் மக்கள் நலத்திட்டங்களைப் பெறுவோர் தூதுவர்களாகச் செயல்பட்டு இந்த அரசுக்குத் துணை நிற்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: சசிகுமாரின் ஃப்ரீடம் வெளியீடு ஒத்திவைப்பு! ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.