
திருவள்ளூர் அருகே நிகழ்ந்த டேங்கர் ரயில் தீ விபத்தால் யாருக்கும் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
மின் கேபிள் எரிந்ததால் ரயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டேங்கர் ரயில் தீ விபத்தால் யாருக்கும் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளுக்காக உதவி எண்களை ரயில்வே அறிவித்துள்ளது. 044 2535 4151, 044 2435 4995 ஆகிய எண்களை பயணிகள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி, தீப்பற்றி எரிந்ததில் 8 பெட்டிகள் முழுமையாக நாசமானது.
சென்னை எண்ணூரிலிருந்து 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், டீசல் என்ஜின் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
கச்சா எண்ணெய் டேங்கரில் உராய்வு ஏற்பட்டதில் தீப்பற்றி எரிந்து, அடுத்தடுத்து 7 டேங்கர் பெட்டிகளில் தீ மளமளவென பரவியது.
தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சியடித்தது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஆதார், வெறும் அட்டைதானா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.