திமுகவில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தல்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலர்கள் கூட்டம்...
MK Stalin Photo
முதல்வர் மு.க. ஸ்டாலின்x
Published on
Updated on
1 min read

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திமுகவில் உறுப்பினா்கள் சோ்ப்பை முன்னெடுப்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்டச் செயலாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

காணொலி காட்சி வாயிலாக இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த கூட்டத்தில், அனைத்து மாவட்டச் செயலர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

”தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கவும், நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி, தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளவும், திமுக உறுப்பினர்களாக அவர்களைச் சேர்க்கவும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை கடந்த 3-ஆம் தேதி தொடங்கினோம்.

செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது என கேள்விப்படும் போது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு திமுக தொண்டர்களுக்கும் என் தலை தாழ்ந்த வணக்கம், நன்றி.

உறுப்பினர் சேர்க்கைக்கு இன்னும் 30 நாள்கள் உள்ளது. எண்ணிக்கைக்கு கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவம், ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது கலந்துரையாடுவதை உறுதி செய்ய வேண்டும்.

மத்திய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள, இழைக்கவுள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்வதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்.

அடுத்த 30 நாள்களில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

நாம உருவாக்கியிருக்க பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்கள் திமுகவுக்கு மிகப்பெரிய சொத்து. அவங்களை எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், தேர்தலை கடந்தும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

DMK leader and Tamil Nadu Chief Minister M.K. Stalin meeting with DMK district secretaries

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com