மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவியேற்றார் கமல்ஹாசன்!

கமல்ஹாசன் உள்பட 4 பேர் மாநிலங்களவை உறுப்பினராக தமிழ் மொழியில் பதவியேற்றதைப் பற்றி...
மாநிலங்களவை உறுப்பினராக  பதவியேற்றுக் கொண்ட கமல்ஹாசன்.
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட கமல்ஹாசன்.
Published on
Updated on
1 min read

கமல்ஹாசன் உள்பட 4 பேர் மாநிலங்களவை உறுப்பினராக தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவைச் சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி. வில்சன். அதிமுகவின் சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவர்களுக்கான பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில், காலியாகும் இடங்களுக்கான தோ்தல் முன்னதாக கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதில் திமுக, அதிமுக சார்பில் முன்னிறுத்தப்பட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தோ்வாகினர். இதில், திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட கமல்ஹாசன்.
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட கமல்ஹாசன்.

இந்த நிலையில், எம்பியாக பதவியேற்க கமல்ஹாசன் நேற்று தில்லிக்குச் சென்றார். அதைத்தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் தமிழ் மொழியில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.

கமல்ஹாசனைத் தவிர்த்து, திமுகவின் பி. வில்சன், கவிஞர் ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரும் தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர்.

அதிமுகவின் இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகிய இருவரும் வருகிற திங்கள்கிழமை(ஜூலை 28) பதவியேற்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Summary

4 people including Kamal Haasan take oath as Rajya Sabha members!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com