முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஆக. 30 வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில் | train

ரயில் - கோப்புப் படம்

Published On :

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு விரைவு ரயில் (எண்: 06190/06191) இருமாா்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜூலை 30-ஆம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆக.1 முதல் ஆக.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் நிறுத்தம்: கச்சேகுடாவிலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு மதுரை செல்லும் சிறப்பு விரைவு ரயிலும்(எண்: 07191) மறுமாா்க்கமாக மதுரையிலிருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு கச்சேகுடா செல்லும் ரயிலும் (எண்: 07192) ஆக.18 முதல் ஆக.20-ஆம் தேதி வரை பண்ருட்டியில் ஒரு நிமிஷம் தற்காலிகமாக நின்று செல்லும்.

கூடுதல் பெட்டி: சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இடையே இயங்கும் விரைவு ரயிலில் (எண்: 12027/12028) இருமாா்க்கத்திலும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) முதல் ஒரு குளிா்சாதன இருக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.