

மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு தமிழகம் வந்தடைந்தார்.
தனி விமானத்தில் தூத்துக்குடி வந்திறங்கிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் முருகன், ராம் மோகன் நாயுடு, தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுகவின் தளவாய் சுந்தரம் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து தூத்துக்குடியில் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து பிரதமர் பேசுகிறார். பின்னர், இரவு 9.40-க்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.
ஜூலை 27-ஆம் தேதி காலை திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார்.
அங்கு பகல் 12 மணிக்கு நடைபெறும் மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர், திருச்சி விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.30-க்கு தில்லி செல்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.