லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை காங்கிரஸ்: பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் மோடி விமர்சனம்

PM Modi

பிரதமர் மோடி - பிடிஐ

Published On :

காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கிவைத்த பிரதமர் மோடி, நிகழ்ச்சியில் பேசுகையில், "காங்கிரஸ் கட்சி, அசாமின் பல தலைமுறையினரை மாயக் கனவுகள் மூலம் ஏமாற்றி வந்தது. நீங்கள் காங்கிரஸை நாட்டிலிருந்து அசாமிலிருந்து அகற்றிவிட்டு, பாஜக-என்டிஏ கூட்டணிக்கு வாய்ப்பளித்தீர்கள்.

காங்கிரஸ், தனது சுயநல அரசியலுக்காக பல்வேறு சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி வந்தநிலையில், பாஜகதான் நீடித்த அமைதியை ஏற்படுத்த முயற்சித்தது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி - பிடிஐ

காங்கிரஸ் என்பது பொய் வாக்குறுதிகளை விற்கும் ஒரு கடை. ஒவ்வொரு பொய் வாக்குறுதியுடனும் 4 பெரும் பொய்களையும் போனஸாக காங்கிரஸ் வழங்குகிறது.

அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு எந்தக் காலத்திலும் சிறிதும் இல்லை.

காங்கிரஸார் மற்றொரு கொடிய பாவத்தையும் செய்தனர். அதுவே நாட்டுக்கும் அசாமுக்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியது.

வாழ்வாதாரம், பெண்கள், நிலம் ஆகிய 3 முக்கிய கூறுகளின் பாதுகாப்பையுமே காங்கிரஸ் கேள்விக்குறிக்கு உள்ளாக்கியது. அவர்கள் எப்போதும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவளித்து வந்தனர்.

இந்தப் பகுதியில் பழங்குடியினருக்கான நிலம் தொடர்பான அடிப்படை சட்ட ஆவணங்களைக்கூட காங்கிரஸார் வழங்க மறுத்தனர். ஆனால், அந்த நிலங்களை ஊடுருவல்காரர்களுக்கு அளித்தனர். இதனால், போடோலாந்தின் மக்கள்தொகையியல் சமநிலை சீர்குலையத் தொடங்கியது; சமூகத்தை ஒரு பெரும் நெருக்கடி ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

ஆனால், தற்போது ஹிமந்த பிஸ்வா சர்மாவின் ஆட்சியில் ஊடுருவல்காரர்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கும் மாபெரும் இயக்கம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.

Summary

Congress is a shop of false promises, says PM Narendra Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.