இஸ்ரோ தலைவர் நாரயணன்
இஸ்ரோ தலைவர் நாரயணன்

பருவ காலங்களை கணிக்கும் செயற்கைக்கோள்: ஜூலை 30ல் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர்

ஜூலை 30ல் விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள் குறித்து...
Published on

மழைக்காலம் மற்றும் பருவ காலங்களில் மேகமூட்டங்கள் எவ்வளவு இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை தெளிவாக புகைப்படம் எடுக்க உதவும் புதிய செயற்கைக்கோள், ஜூலை 30 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாரயணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ”ஜூலை 30-ந் தேதி நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவ உள்ளது. இதில் 2 முக்கிய விஷயம் உள்ளது.

மழைக்காலம் மற்றும் பருவ காலங்களில் மேகமூட்டங்கள் எவ்வளவு இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை தெளிவாக புகைப்படம் எடுக்க முடியும். மற்றொன்று பேரிடர் காலங்களை முழுமையாக கண்காணித்து தெளிவான தகவல்களை தர முடியும்.

இந்த செயற்கைக்கோள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஆண்டு 12 ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பல்வேறு தொழில்நுட்பங்கள் பொருந்திய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறிப்பாக ஆளில்லாத செயற்கைக்கோளை இந்த ஆண்டு டிசம்பரில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இந்திய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய அனைத்து வகையான திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம்.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பாதையில் எங்களுடைய பணிகளும் இருக்கும். அதற்காக பல திட்டங்களை உருவாக்கி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

ISRO Chairman Narayanan has announced that a new satellite that will help take clear photographs of objects that may be present in the clouds during the monsoon and monsoon seasons will be launched on July 30.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com