முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

பிரதமரிடம் 3 கோரிக்கைகள் வைத்த இபிஎஸ்! என்னென்ன?

தமிழகம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் 3 கோரிக்கைகள் வைத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

X | AIADMK

Published On :

தமிழகம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார்.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமா் நரேந்திர மோடி தூத்துக்குடி நிகழ்வை முடித்துக் கொண்டு திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு 10.05 மணிக்கு வந்தார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விமான நிலையத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்தார்.

அவர் அளித்த கோரிக்கைகளாக,

விவசாயிகளுக்கான கடன் வழங்கும் செயல்முறையில் சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் வழித்தடத்தை சென்னை, கோவை, ஒசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும்.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து, உடனடியாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை மனுவாக சமர்ப்பித்தார். எடப்பாடி பழனிசாமி அளித்த கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, அதனைப் பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோயில் வளாகத்தில் இன்று (ஜூலை 27) நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

Summary

ADMK General Secretary EPS submits petition to PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.