
தேமுதிகவுடன் சுமுக உறவு உள்ளது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மதுரையில் கால்வாயை திரைச்சீலை வைத்து மறைத்துவைக்கும் அளவுக்கு அவல ஆட்சி நடக்கிறது.
தூர்வாரப்படாததால் பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை கொண்டு மூடினர். கால்வாய் தூர்வாரப்படாதது அவர்களுக்கே பிடிக்கவில்லை.
அதிமுக யாருக்கும் எப்போதும் துரோகம் இழைக்கவில்லை. திமுகதான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது. 4 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி, மோசமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
16 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. தேமுதிக எங்களுடன் சுமுக உறவில் உள்ளது. எதையாவது சொல்லி பிரேக் பண்ண நினைக்காதீங்க. அது ஒருபோதும் நடக்காது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.