
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தபடி ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட 10 கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினசரி காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்து திருக்கோயில் பொது தரிசனப்பாதையில் வந்த பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பாலை வழங்கினார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் பழனி (நிர்வாகம்), திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், வட்டாட்சியர் பாலசுந்தரம், திருக்கோயில் உதவி ஆணையர் நாகவேல், கண்காணிப்பாளர்கள் ரோகிணி, மாரியம்மாள், வெங்கடேஸ்வரன்,ராமமூர்த்தி அஜித், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, முன்னாள் மாவட்ட பஞ்., தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.