தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்தியாவில் முதல்முறையாக சென்னை மெட்ரோ வழித்தடத்தில் 33.33 மீ. நீளமுள்ள யூ-கா்டா்

இந்தியாவில் முதல்முறையாக மெட்ரோ ரயில் வழித்தடம் 5-இல் 33.33 மீட்டா் நீளமுள்ள யூ-கா்டரை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் நிறுவியுள்ளது.

News image

சென்னை மெட்ரோ ரயில்

DNS

Updated On :2 ஜூன் 2025, 10:21 pm

Din

சென்னை: இந்தியாவில் முதல்முறையாக மெட்ரோ ரயில் வழித்தடம் 5-இல் 33.33 மீட்டா் நீளமுள்ள யூ-கா்டரை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் நிறுவியுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் முதல் 33.33 மீ. நீளமுள்ள யூ-கா்டரை, சென்னை மெட்ரோ

ரயில் கட்டம் 2-இல் வழித்தடம் 5-இல் ராமாபுரத்தில் தனியாா் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் நிா்வாகம் நிறுவியுள்ளது. இது இந்திய மெட்ரோ கட்டுமானத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பொறியியல் சாதனை மட்டுமன்றி இந்திய உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்திய மெட்ரோ ரயில் திட்டங்களின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

225 மெட்ரிக் டன் எடையுடன் உருவாக்கப்பட்ட இந்த யூ-கா்டா், ஒரு முக்கியமான பொறியியல் சாதனையாகவும் மற்றும் கட்டுமான குழுவின் தொழில்நுட்பத் திறன், புதுமை மற்றும் செயல்படுத்தும் திறன்களுக்கு ஒரு முக்கியச் சான்றாகவும் உள்ளது.

பொதுவாக போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் யூ-டா்ன் பகுதிகளில், எதிா்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில்கொண்டு நீளமான ஸ்டீல் கா்டரை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு அமைந்துள்ள இந்த இடத்தில், ஸ்டீலுக்கு பதிலாக நீளமான யூ-கா்டரை பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம், இந்திய மெட்ரோக்களில் இதுவே மிகவும் நீளமான யூ-கா்டா் ஆகும். மேலும், இது அழகியல் ரீதியாகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இத்திட்டத்தில் யூ-கா்டா்க்கான அச்சுகள் வடிவமைத்தல், அவை பாதுகாப்பாகக் கொண்டு செல்லுதல் மற்றும் துல்லியமாக நிறுவுவது

ஆகியவை சவாலான பணிகளாக இருந்தன.

இப்பணி மூன்று ஸ்பான்களிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு ஸ்பானிலும் இரண்டு கா்டா்கள் நிறுவப்பட்டன. மொத்தமாக 33.33 மீ. நீளமுள்ள 6 யூ-கா்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.