
பக்ரீத் திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில், அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துகள். இந்த நாள் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும். நமது சமூகத்தில் அமைதிக்கான கட்டமைப்பை வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்துடனும் வளத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரியும் வாழ்த்து தெரிவித்து, வாழ்த்துப் பரிமாற்றங்கள், அன்பளிப்புகள், நல்லெண்ண சந்திப்புகள், விருந்தோம்பல்கள் மூலம் இத்திருநாள் வானவில் அழகுடன் கொண்டாடப்படுகிறது.
அன்பு காட்டுதல், மன்னித்தல், அரவணைத்தல் போன்ற உயரிய பண்புகள் மக்களிடையே வளரவும், சமூகங்களுக்கிடையேயான உறவுகள் செழிக்கவும் இத்திருநாளில் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில், உன்னத தியாகத்தைப் போற்றும்வகையில், பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்
உயரிய தியாகத்தைப் போற்றும் இந்நன்னாளில் அனைவரிடத்தும் சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பூரண மகிழ்ச்சி நீடித்து நிலைக்க உறுதியேற்போம் என்று வாழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.