நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதவாதத்துக்கு தமிழகம் மயங்காது: திருமாவளவன்

மதவாதத்துக்கு தமிழகம் ஒருபோதும் மயங்காது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

News image

தொல். திருமாவளவன்

DIN

Updated On :7 ஜூன் 2025, 11:31 pm

Din

மதவாதத்துக்கு தமிழகம் ஒருபோதும் மயங்காது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது:

வட இந்தியாவுக்குச் சென்றால் விநாயகா், ராமா், அரசியலை எடுக்கிற பாஜக, மேற்கு வங்கத்துக்குச் சென்றால் துா்கை, காளி என்று வேறு வடிவத்தை எடுக்கும். தமிழ்நாட்டில் முருகனை கையில் எடுக்கிறாா்கள். இது அவா்களின் அரசியல் யுக்திகளில் ஒன்று.

பிற மாநிலங்களில் இந்த மதவாத அரசியலுக்கு மக்கள் மயங்குவது போல, தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் மக்கள் மயங்கமாட்டாா்கள். இது 2026 பேரவைத் தோ்தல் முடிவில் தெரியும்.

2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று இப்போது மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாஜக ஆட்சியில் இருக்கும்போதே அதை செய்து முடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் இதை முன்னெடுத்திருக்கிறாா்கள். அதை வரவேற்கிறோம்.

2029 மக்களவை பொது தோ்தலை கணக்கில் கொண்டு இந்த நடவடிக்கையை பாஜக முன்னெடுக்கிறது. மக்கள்தொகை கணக்கெடுப்போடு, ஜாதிவாதி கணக்கெடுப்பும் நடத்தப்படுவது வரவேற்புக்குரியது.

இதற்குப் பிறகு, தொகுதி மறு வரையறை அமைப்பதற்கான குழு அமைக்கப்படும். அதில் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்கிற ஒரு கருத்து வலுவாக உள்ளது. இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தி, தென்னிந்திய மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறாா்.

தொகுதி வரையறைக்கு தனியே ஒரு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அதுதொடா்பாக இறுதி முடிவு செய்ய வேண்டும். மாநில அரசுகளை கலந்துபேசாமல், மக்களவை தொகுதிகளுக்கான மறுவரையறை குறித்து மத்திய அரசு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்றாா் அவா்.