கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சுங்கச்சாவடி கட்டணம்- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மதுரை-தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

News image

உச்ச நீதிமன்றம்.

Updated On :7 ஜூன் 2025, 12:39 pm

மதுரை-தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வரலாம் எனத் தகவல் தெரியவந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்திருந்த நிலையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை அருகேயுள்ள எலியார்பத்தி என்னும் இடத்தில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் கடந்த 2011-ஆம் ஆண்டுமுதல் எந்த பராமரிப்புப் பணியும் செய்யப்படவில்லை. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. பேருந்துகள் அடிக்கடி பழுதாகின்றன. மேலும், அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன.

இதனையடுத்து, சேதமடைந்துள்ள சாலையை முழுமையாகச் சீரமைக்கும் வரை எலியார்பத்தியிலும் புதூர் பாண்டியபுரத்திலும் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை அளிக்க ஆணையிட்டுள்ளதுடன், எலியார்பத்தி சுங்கச் சாவடி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து செவ்வாய்க்கிழமை(ஜூன் 3) உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.