அமித் ஷா வருகை: மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.
ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.
Published on
Updated on
1 min read

மதுரை: மதுரை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சற்று நேரத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தர இருப்பதால், பக்தர்களுக்குக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முகூர்த்த தினம் என்பதால் இன்று காலை முதலே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சரின் வருகையை முன்னிட்டு, கோயிலுக்கு 5 அடுக்குப் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!

முதற்கட்டமாக, மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்குக் கோபுரம் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலின் அனைத்து கோபுர வாயில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com