அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அதிமுகவின் திட்டங்களை திமுக முடக்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Published on
Updated on
1 min read

அதிமுகவின் திட்டங்களை திமுக முடக்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அரக்கோணம் எம்எல்ஏ ரவியின் இல்லத் திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். தொடர்ந்து, திருமண நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், அதிமுக கூட்டணியில் மேலும் சில முக்கிய கட்சிகள் இணையும் வாய்ப்புகள் உள்ளன. திமுக 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்.

மக்களைப் பற்றி கவலை ஸ்டாலினுக்கு இல்லை. வருகிற 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெறும்.

அதிமுக ஆட்சியில்தான் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. மேலும், தமிழகம் முழுவதும் சிறப்பான சாலைகளும் மேம்பாலங்களும் கொண்டு வரப்பட்டன. அதிமுக கொண்டுவந்த திட்டங்களை முடக்கிய பெருமை திமுகவையே சாரும்.

திமுக ஆட்சியில் ஏதேனும் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, அதனையும் கிடப்பிலேயே போட்டு விடுவார்கள். அதிமுக ஏற்கெனவே அறிவித்த திட்டங்களையும் ஸ்டிக்கர் ஒட்டு கொண்டு வருவார்கள்.

திமுகவின் குடும்ப அரசியலாக, குடும்ப ஆட்சியை நடத்தி வருகிறார் ஸ்டாலின். 2010 ஆம் ஆண்டில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com