பிரதிப் படம்
பிரதிப் படம்

கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமையாளர்கள் கைது

கர்நாடகத்தில் கல் குவாரியில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயன்ற குவாரி உரிமையாளர்கள் கைது
Published on

கர்நாடகத்தில் கல் குவாரியில் மண், பாறைகள் சரிந்து விழுந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலியானார்.

கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் துமகேரே கிராமத்தில் கல் குவாரியில், வெள்ளிக்கிழமையில் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மண், பாறைகள் சரிந்து விழுந்தன. குண்டுவெடிப்பின்போது ஏற்பட்ட இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கி, பலத்த காயமடைந்தனர்.

இதனையடுத்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், மதுரையைச் சேர்ந்த மணி (40) என்ற தொழிலாளி, துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், தொழிலாளி இறந்ததை காவல்துறைக்கு தெரிவிக்காமல், மணியின் உடலை எரிக்கத் திட்டமிட்டு, தமிழ்நாட்டுக்கு கொண்டுவர குவாரி உரிமையாளர்கள் முயன்றனர்.

இருப்பினும், குவாரி உரிமையாளர்களின் சதித் திட்டத்தை அறிந்த காவல்துறையினர், மணியின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, குவாரி உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Open in App
Dinamani
www.dinamani.com