டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

பாலியல் ‘சார்’-களை எப்போது கட்டுப்படுத்தப் போகிறீர்கள்? முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: இபிஎஸ் கடும் கண்டனம்!

News image
Updated On :9 ஜூன் 2025, 12:36 pm IST

சென்னை: சென்னை தாம்பரம் அருகேயுள்ளதொரு அரசு சேவை இல்லத்தில் 8-ஆம் வகுப்பு மாணவியொருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜூன் 9) கூறியிருப்பதாவது:

அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமிகளைக் காக்க வேண்டிய காவலாளியே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது துளி கூட பயம் இல்லை என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளது. இந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனரா? என்பதை காவல்துறையினர் தீர விசாரிக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் ’அவுட் ஆஃப் கண்ட்ரோல்(கட்டுப்பாட்டை மீறி)’ இருக்கும் பாலியல் "சார்"-களை எப்போது கட்டுப்படுத்தப் போகிறீர்கள்?

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.