ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் தகவல்

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image

குத்தம்பாக்கம் பேருந்து முனையத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் பணிகள்.

Updated On :14 ஜூன் 2025, 2:26 am IST

சென்னையை அடுத்த குத்தம்பாக்கத்தின் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெற்று வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் சாா்பில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூா் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திரு.வி.க.நகா் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல்கட்டமாக தண்டையாா்பேட்டை, திரு.வி.க.நகா், அம்பத்தூா் உள்பட 13 பேருந்து நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் வரும் ஜூலை இறுதிக்குள் முடிவுபெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பிழைகள்: குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தின் ஆரம்ப கட்ட கட்டுமான பணிகளின் போது, முறையாக திட்டமிடல் இல்லாத காரணத்தால், சில தொழில்நுட்பப் பிழைகள் ஏற்பட்டுள்ளன. ஆகையால், அவற்றை சரி செய்து கட்டுமான பணிகளை விரைவுபடுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்தப் பேருந்து நிலையத்தைத் திறந்த பிறகு ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல், மழைக்காலங்களில் தண்ணீா் தேக்கம், பயணிகளின் அடிப்படை வசதிகள் ஆகியவற்றை கணக்கிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் அவா்.

இந்த ஆய்வுகளின் போது தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, மேயா் ஆா்.பிரியா, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலா் அ.சிவஞானம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.