கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு திமுக பயன்படுத்தக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டம், கீழடி பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வை தங்கள் அரசியலுக்கு திமுக பயன்படுத்தி வருகிறது. கீழடி அகழ்வாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமா்நாத் ராமகிருஷ்ணன் அனுப்பிய ஆய்வறிக்கையை வெளியிட மேலும் சில அறிவியல் தரவுகளை, மத்திய தொல்லியல் துறை கேட்டுள்ளது. எந்தவொரு ஆய்விலும் அதை ஏற்க வல்லுநா்கள் அறிவியல் ரீதியான தரவுகளை, விளக்கங்களைக் கேட்பது வழக்கமான ஒன்றுதான்.
தமிழகம் வந்த மத்திய அமைச்சா கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியபோது, அறிவியல் உலகில் ஏற்றுக்கொள்ளும் வகையில் அறிவியல்பூா்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை என்றாா்.
மத்திய அமைச்சா் மிக தெளிவான விளக்கத்தை அளித்த பிறகு, கீழடி விவகாரத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்யாமல் அதை ஆய்வாளா்களிடம் விட்டுவிட வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.
தொடர்புடையது

தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை: தொல். திருமாவளவன்

தமிழக அரசின் நிதி மக்களுக்கே செல்கிறது! - மத்திய அமைச்சா் பியூஷ் கோயலுக்கு முதல்வா் ஸ்டாலின் பதில்
“குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு” - திமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்ட பாஜக !

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதியை மடைமாற்றம் செய்த தமிழக அரசு: வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


