தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பேருந்து சேவை: தொடக்கி வைத்தார் முதல்வர்

தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பஸ் சேவையை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
mini bus service
மினி பேருந்து சேவைCenter-Center-Chennai
Published on
Updated on
1 min read

தஞ்சை: தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பேருந்து சேவையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சையில் இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடவிருக்கும் மினி பேருந்தின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2ஆகவும் அதிகபட்சம் ரூ.10 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பேருந்து சேவை துவக்க விழா இன்று காலை நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், விரிவாக்கம் செய்யப்பட்ட 22 பழைய வழித்தடம் மற்றும் 8 புதிய வழித் தடம் என மொத்தம் 30 வழித் தடத்தில் மினி பேருந்து சேவை துவக்க விழா காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் இன்று காலை நடந்தது.

தமிழகம் முழுமைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சையிலிருந்து திட்டத்தைத் துவக்கி வைத்ததை தொடர்ந்து, கோவையில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், எம்.பி.க்கள் கணபதி ராஜ்குமார் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் ஆகியோர் இச்சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

இதையும் படிக்க. விபத்து கற்றுத்தந்த பாடம்! அவசர அழைப்புக்கு தங்கள் செல்போன் எண்ணை கொடுத்திருந்த பயணிகள்!

பின்னர், மினி பேருந்தில் ஏறி, சிறிது தூரம் பயணம் செய்தனர். கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள் 8 மினி பேருந்து, கோவை வடக்கில் 4 மினி பேருந்து, கோவை மேற்கில் 15 மினி பஸ், கோவை தெற்கில் 1 மினி பேருந்து, பொள்ளாச்சியில் 2 மினி பேருந்து என மொத்தம் 30 மினி பஸ்கள் இன்று காலை முதல் இயங்க துவங்கின.

இந்த பேருந்துகளில், குறைந்தபட்சம் ரூ.2, அதிகபட்சம் ரூ.10 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மினி பஸ்கள் இன்று முதல் மீண்டும் இயங்கக் துவங்கி உள்ளதால், கிராமப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com