
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முப்பரிமாண மாதிரிப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் இரண்டு கட்டங்களாக அடுத்தடுத்து நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும, அதன்படி, முதல் கட்டப் பணிகள் வரும் 2026ஆம் ஆண்டிலும் இரண்டாம் கட்டப் பணிகள் 2027ஆம் ஆண்டிலும் நிறைவடையவிருக்கிறது என்று மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளமும் அமையவிருப்பது போன்ற மாதிரிப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அருகே குறுங்காடு அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையாதது குறித்து தமிழகத்தில் அவ்வப்போது விவாதங்கள் எழும் நிலையில், மருத்துவமனையின் முப்பரிமாண மாதிரிப் படத்தை வெளியிட்டது அரசு.
சுமார் 900 படுக்கைகள் கொண்டதாக இந்த மருத்துவமனை அமையவிருக்கிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் முப்பரிமாண படங்கள் விளக்கப்பட்டிருக்கும் இந்த விடியோவுடன், லட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் அதி நவீன தொழில்நுட்பமும், அர்ப்பணிப்பு மற்றும் கருணையுடன் சிகிச்சையளிப்பதுவும் ஒன்றுகலந்து இந்த கட்டடத்தின் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை வளாகத்தில், வாகன நிறுத்துமிடங்கள் முழுக்க சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்புகளாக உருவாக்கப்படவிருப்பதையும் எங்கிருந்தும் நோயாளிகளை ஹெலிகாப்டரில் உடனடியாகக் கொண்டு வரும் வகையில் ஹெலிகாப்டர் இறங்குதளங்களும் அமைக்கப்படவிருக்கின்றன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்பட்டதும், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் மேம்பாடும் இந்த விடியோவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.