நீலகிரிக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை! கனமழை பெய்யும்!!

நீலகிரிக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை...
heavy rain alert for nilgiris district
நீலகிரிக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைIMD
Published on
Updated on
1 min read

நீலகிரிக்கு இன்று(புதன்கிழமை) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கடந்த சில நாள்களாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று(புதன்கிழமை) நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி அவலாஞ்சியில் 78 மி.மீ. மழை பெய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com