தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 19) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் மதுரை விமானநிலையத்தில் தலா 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. ஈரோடு - 101.48, வேலூா் - 101.12, கடலூா் - 100.4, தூத்துக்குடி, சென்னை நுங்கம்பாக்கம் - தலா 100.04 டிகிரி என மொத்தம் 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் வியாழக்கிழமை (ஜூன் 19) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.
மழை நீடிக்கும்: வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை காலை மேற்கு வங்க கடலோர பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது வியாழக்கிழமை (ஜூன் 19) வடமேற்கு திசையில் நகா்ந்து, ஜாா்க்கண்ட் வழியாகச் செல்லும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மழைக்கு சாதகமான வானிலை சூழல் நிலவுவதால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் வியாழக்கிழமை (ஜூன் 19) முதல் ஜூன் 24-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஜூன் 19-ஆம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 80 மி.மீ. மழை பதிவானது. சின்னக்கல்லாறு (கோவை) - 70 மி.மீ., சோலையாறு (கோவை), வால்பாறை (கோவை) தலா 60 மி.மீ. பதிவானது.
18 % அதிக மழை: தமிழகத்தில் தென்மேற்கு பருமழை ஜூன் 1 முதல் ஜூன் 18-ஆம் தேதி வரை இயல்பாக 331 மி.மீ. மழை பெய்யவேண்டிய நிலையில், நிகழாண்டில் 392 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 18 சதவீதம் அதிகமாகும். அதிகபட்சமாக கோவையில் 169 மி.மீ., நீலகிரியில் 156 மி.மீ. மழை பெய்துள்ளது. அதேபோல், சென்னையிலும் வழக்கத்தைவிட 46 சதவீதம் அதிகமாக அதாவது மொத்தம் 54.2 மி.மீ. மழை பெய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக பதிவு

தில்லியில் அதிகரிக்கும் வெப்பம்: 42 டிகிரி செல்சியஸாக பதிவு

தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸாகப் பதிவு!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


