விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது!

ஒற்றைச் சிறகு ஓவியா என்கிற சிறார் நாவலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Vishnupuram Saravanan
விஷ்ணுபுரம் சரவணன் / ஒற்றைச் சிறகு ஓவியா புத்தக அட்டைபடம் - முகநூல்
Published on
Updated on
1 min read

தமிழில் விஷ்ணுபுரம் சரவணணுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் எழுதிய ஒற்றைச் சிறகு ஓவியா என்கிற சிறார் நாவலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வெளியான கவிதை, நாவல், நாடகம், கட்டுரை, சிறுகதைகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் விஷ்ணுபுரம் சவரணனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ஒற்றைச் சிறகு ஓவியா என்கிற சிறார் நாவலுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

தமிழில் தொடர்ந்து சிறார் கதைகள், நாவல்கள் எழுதிவரும் விஷ்ணுபுரம் சரவணன், கயிறு, நீலப்பூ, எலியின் வேட்டை உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

இதேபோன்று, கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள் சிறுகதைத் தொகுப்புக்காக எழுத்தாளர் லட்சுமிஹருக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு மொழியில் கங்கிசெட்டி சிவகுமாருக்கும், மலையாளத்தில் ஸ்ரீஜித் மூதேதாத்துக்கும் பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com