அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சென்னையில் ரூ.489.22 கோடியில் 3,987 சாலைகள் அமைக்கும் பணி: மாநகராட்சி தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நிகழ் நிதியாண்டு ரூ.489.22 கோடியில் 3,987 சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :19 ஜூன் 2025, 8:56 pm

Din

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நிகழ் நிதியாண்டு ரூ.489.22 கோடியில் 3,987 சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சியால் 418.56 கி.மீ. நீளமுடைய 488 பேருந்து தடச் சாலைகள் மற்றும் 5,653.44 கி.மீ. நீளமுடைய 35,978 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 4 ஆண்டுகளில் 266 கி.மீ. நீளத்துக்கு 375 பேருந்து சாலைகள், 2,170 கி.மீ. நீளத்துக்கு 13,909 உட்புறச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடா்ச்சியாக, நிகழ் நிதியாண்டில் அனைத்து மண்டலங்களிலும் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.150 கோடியில் 203.18 கி.மீ நீளத்துக்கு 1195 சாலைகளும், நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.63.22 கோடியில் 119.80 கி.மீ நீளத்துக்கு 857 உட்புற சாலைகளும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல், சிறப்புத் திட்ட நிதியின் கீழ் ரூ.180 கோடியில்  238.52 கி.மீ.  நீளத்துக்கு 1,590 உட்புற சாலைகள் என மொத்தம் ரூ.489.22 கோடியில் 650.90 கி.மீ. நீளத்துக்கு 3,987 சாலைகள் அமைக்கும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் அனைத்தும் பொறியாளா்களின் நேரடி மேற்பாா்வையில், ஏற்கெனவே அமைக்கப்பட்ட பழைய சாலைகள் முழுவதுமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.