மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெ.டி.குமாரசாமி சேலம் உருக்காலையில் ஆய்வு செய்தார்.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, அமைச்சராக பதவியேற்ற பின் சேலம் உருக்காலைக்கு முதல்முறையாக கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வருகை தந்தார். சேலம் உருக்காலையை அப்போது அவர் ஆய்வு செய்தார்.
இதனிடையே 2-வது முறையாக அமைச்சர் ஹெ.டி.குமாரசாமி சேலம் உருக்காலைக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தார். அவருக்கு சேலம் உருக்காலை விருந்தினர் மாளிகையில் உருக்காலை நிர்வாக இயக்குனர் பிரபீர் குமார் சர்க்கார் தலைமையில் அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் அளிக்கும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அமைச்சர், அணிவகுப்பினை பார்வையிட்டார். பின்னர் உருக்காலை வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியிலும் அமைச்சர் பங்கேற்று மரக்கன்றை நட்டு வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் குமாரசாமி, உருக்காலையில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் நாளை நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் உருக்காலை பணியாளர்களுடன் இணைந்து யோகா செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வுக்கு பின்னர் சேலத்தில் தங்கும் அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, சனிக்கிழமை காலை உருக்காலை வளாகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தலைமையில் சேலம் உருக்காலை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவியர் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பயங்கரவாதம் மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரி: அமித் ஷா

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சென்னையில் அமித் ஷா, ஸ்டாலின் சாலை வலம்!

சேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


